Ideas

 We believe in the infinite potential of people. By creating a network of passionate people, we hope to inspire great ideas and find solutions to address burning social issues. 

வட்டி இல்லா கடன் முறையை ஏற்படுத்தல்.

The Problem

இன்றைய கண்ணோட்டத்தில் மக்களின் நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்துவதென்பதே சிக்கலாக அமைந்துள்ளது.உதவி என்ற பெயரில் தங்களினின் தமது சுய இலாபங்களுக்காகவும், தமது விஸ்திரத்தன்மைக்காகவும் போட்டி போட்டுக்கொண்டு இன்றைய அரச , அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன.மக்கள் கடனுக்கு மேல் வாங்கி கொண்டு வாழ்நாள் முழுவதும் கடன் கைதிகளாக வாழ்வது மட்டுமின்றி தற்கொலைகள், கொலைகள்,கடத்தல்கள் முதலான பல சமூக சிக்கல்களும் ஏற்பட்டுக் கொண்டு இருப்பதையும் இனங்கான முடிகிறது.

THE SOLUTION

நடைமுறையில் மக்களுக்கு கடன் உதவி அவசியம்.தமது அவசர தேவைகளை தீர்க்கும் வகையில் அவசியமாகின்றது.வட்டி இல்லாத கடன் முறையை அமுல்படுத்த வேண்டும்.கிராமிய மட்டங்களிலும், ஏனைய தளங்களிலும் சரி வட்டி என்ற சொல்லுக்கு இடம் இல்லாத வகையில் கடன் வழங்கப்படுவதுடன் பகுதி அளவிலான தவணையும் ஏற்படுத்தப்படுவது மட்டுமின்றி மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களில் தங்கி இருப்பது அதிக வட்டிகளை அறவிடுவது மக்களின் வாழ்வாதார மேம்பாடு, முன்னேற்றம்,சமூக அபிவிருத்தி கருதி தடுக்கப்பட வேண்டும்.மேலும் அதிக கடன்களை வட்டிக்கு பெறுவதில் தடை சமன்பாடு,வரைமுறை கொண்டு வருவது பயன்படத்தக்கது.

BUDGET

100000

BY AbiAbilash
2 Votes

கல்சியமற்ற நீரும் கவலை கடந்த வாழ்வும்

The Problem

வவுனியா பகுதிகளில் நீரானது கல்சியம் செறிவுக் கூடியதாக காணப்படுவது அண்மையக் காலங்களில் ஆதார பூர்வமாக ஆய்வுகள் மூலம் நிருபணமாகியுள்ளன.எனினும் அது குறித்த விழிப்புணர்வுகள்,அறிவுறுத்தல்கள் எதுவும் மக்களுக்கு வழங்கப்படாததனால் அந்த நீரை பாவிக்கும் மக்கள் சிறுநீரக பாதிப்பு,செயலிழப்பு போன்றவற்றிற்கு உள்ளாகி நிரந்தர நோயாளிகளாகி வருகின்றனர்.இதனால் ஏற்படும் இறப்புக்களும் இன்று வவுனியா மாவட்டத்தைப் பொருத்த மட்டில் அதிகரத்து வருவதற்கு,அண்மைய சுகாதார சேவைகளின் இறப்பு தொடர்பான அறிக்கைகள் ஆதாரம்

THE SOLUTION

முதலாவதாக கல்சியம் கலந்த நீர் பற்றியதும் அதனை பாவிப்பதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்தும் வெளிப்படையானதும் உண்மையானதுமான தகவல்களை மக்களுக்கு அறியப்படுத்தி அது தொடர்பான தெளிவினை ஏற்படுத்த வேண்டும். குறித்த பாதிப்பிலிருந்து ஒவ்வொருவரும் வெளிவரவும் குறைந்தது பிரச்சினைப் பற்றிய பூரண அறிவுப் பெற்றவர்களாக பாதுகாப்பு தொடர்பாக சிறிதேனும் முயற்சிகளை சுயமாக மேற்கொள்ளக் கூடிய பாங்கினை கலந்துரையாடல்கள்,விழிப்பபுணர்வு செயற்றிட்டங்கள் மூலம் ஏற்படுத்தி குறித்த நோயற்ற வாழ்வற்கு அனைவரையும் இட்டுச்செல்ல வேண்டுமென்பதே எனது நீண்ட நாள் ஆவல்.இதனை செயன்முறைப்படுத்தி ஒரு உயிரையேனும் நான் காப்பாற்றினால் அதுவே என் வாழ்நாள் சாதனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

BUDGET

100000

BY jancy
5 Votes

பெண்களை வலுப்படுத்தல்

The Problem

அந்த பகுதியில் உள்ள பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதினால் அங்கு உள்ள பெண்கள் வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்புக்கு செல்கின்றார்கள்.

THE SOLUTION

கல்மடு பிரதேசமானது பாசிக்குடாவிட்கு அமைந்து இருப்பதனால், இனம் காணப்பட்ட பிரச்சினைக்குறிய இலக்கு குலுவை கண்டு பிடித்து அவர்கலுக்கான பொருளாதார முன்னெற்ற வழிகாட்டல் விழிப்புனர்வு கருத்தரங்குகளை முதலாவதாக மேற்கொள்ளல் . அடுத்து முயட்சியுள்ள பெண்கள் மத்தியிலே நிலைத்து நிற்க கூடிய net work group ஒன்றினை உருவாக்கி அவர்களை தொடர் கண்காணித்தல் . அவர்களுக்காக அப்பிரதேசத்தின் வளங்களைப் பயன் படுத்தி உருவாக்க கூடிய தொழில் முயற்சிகளை இனங்காட்டுதல் . உருவாக்கப்பட்ட உற்பத்தி பொருட்களை சந்தைப்ப படுத்தக் கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

BUDGET

100000

BY Riz
1 Votes