Ideas

 We believe in the infinite potential of people. By creating a network of passionate people, we hope to inspire great ideas and find solutions to address burning social issues. 

பிச்சை என்ற சொல்லை சமூகத்தில் இருந்து நீக்குவோம்

The Problem

சாதாரணமாக எந்தவொரு பிரதேசத்தினையும் எடுத்து நோக்குகின்ற போது அதிலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சாய்ந்தமருது கிராமத்தை அடிப்படையாக பார்க்கும் போது அதிகமாக பிச்சை கேட்பவர்கள் உள்ளனர். அவர்களை பிச்சை கேட்பவர்கள் என்று சொல்வதை விட வறுமையின் சீற்றத்தால் கையேந்துபவர்கள் அதிலும் கைக் குழந்தைகளோடு தாய்மார்கள், கல்வியை இழந்து உணவுக்காக ஏங்குபவர்கள், மாற்றுத் திறனாளிகள் இப்படி பல பேர்கள் தமது ஒருவேளை உணவுக்காக பிச்சை கேட்டு சமூகத்தில் தாழ்ந்த இடத்தில் உள்ளவர்களை சுயதொழில் வாய்ப்பு மூலம் அவர்களுடைய வாழ்கையை மாற்றியமைத்து சமூகத்தில் அவர்களையும் ஒருபடி முன்னேற்றி மறு வாழ்வளித்தல்.

THE SOLUTION

சாதாரணமாக நமது சமூகத்தில் அதிகமான பிச்சைக்காரர்களை பார்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக மத வணக்கஸ்தலங்களுக்கு முன்னால் சிறு கைக்குழந்தையோடு சில தாய்கள், அதே போல சில மாற்றுத்திறனாலிகள், இப்படி பல தரப்பட்டவர்களை நாம் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஆகவே நாம் ஏன் அவர்களை பிச்சைக்காரர்கள் என்ற வர்க்கத்தில் இருந்து சுய தொழிலாளர்களாக அவர்களுடைய வாழ்க்கையினை மாற்றி அமைக்க முடியாது. நமது சமூகத்தில் உள்ள எத்தனையொ செல்வந்தர்கள் உள்ளார்கள் அவர்களை கொண்டு ஒருவருக்கு ஒரு குடும்பம் என்று பொறுப்புகளை கொடுத்து அந்த வறுமையாளர்களை நாம் ஒரு படி அவர்களுடைய ஆளுமைகளுக்கு ஏற்ப நாம் வாழ்வாதாரங்களை அமைத்து கொடுத்து அவர்கள் சமூகத்தில் எதிர் நோக்குகின்ற வறுமை, சமூக தாழ்வு பிரச்சிணைகளை நீங்கள் தருகின்ற முதலீட்டு பணத்தோடு சேர்ந்து இந்ந திட்டத்தினை நிறைவேற்றலாம் என நான் நம்புகின்றேன். மேலும் இந்த திட்டத்தின் மூலம் பிச்சை எனும் சொல்லை ஒழித்து அனைவரையும் சமூகத்தில் ஒரே அளவான அந்தஸ்த்து உடையவர்களாக மாற்ற முடியும் என நான் நம்புகின்றேன்.

BUDGET

200000

BY Jalooth NM
5 Votes

கல்விப் பிரச்சினை

The Problem

பெண்டுகள் எனும் கிராமத்தில் முன்பள்ளி பாடப் பாடசாலைக்கான ஆசிரியர் இல்லையால் அங்குள்ள மாணவர்கள் முன்பள்ளி கல்வி இன்றிய நிலையில் நேரடியாக தரம் ஒன்றிற்க்கு கற்கும் வாய்ப்பை பெறுகின்றனர். இந்நிலையானது சிறார்களின் ஆரம்பநிலை ஆளுமை விருத்தியை பெரிதும் பாதிக்கின்றது.

THE SOLUTION

அக்கிராமத்திலேயே உள்ள சாதாரண தரம் மற்றும் உயர்தரம் முடித்தவர்களையும் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவர்களையும் இனங்கண்டு கலந்துரையாடி கற்பிப்பதற்கு வழிப்படுத்தல். கிராம மக்களிடத்தே பாலர்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வூட்டி அசிரியர்களுக்கான சம்பள ஏற்பாடுகளை மக்களூடாகவே நடைமுறைப்படுத்தல்.

BUDGET

30000

BY Kumar Kumar
6 Votes

பெண் தலைமை குடும்பங்களின் பிரச்சனைகள்

The Problem

பெண் தலைமைத்துவம், சமுதாயத்தில் பெண்கள் ஒதுக்கப்படுகின்றார்கள்.

THE SOLUTION

கிராம மட்டத்தில் வாழும் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களில் பல்வேறு வகையான பிரச்சனைகள் காணப்படுகின்றன. 1.சுயதொழிலை முன்னெடுக்க சந்தர்ப்பம் இன்மை. 2.சமூகத்தினால் ஒதுக்கப்படல். 3. சுயதொழில் சார்பான அறிவின்ம. தீர்வுகள். 1.மட்டக்களப்பு சந்திவெளிக் கிராமத்தில் காணப்படும் குறித்த 20 பெண் தலைமை குடும்பங்களை இனங்காணல். 2.அவர்களுக்கு சுயதொழில் சார் அறிவூட்டல் 3.கிடைக்கும் முதலீட்டில் மண்பாண்ட உற்பத்தியினை மேற்கொள்ளல். 4. உரிய வனைதல் சக்கரம் மற்றும் அது சார்ந்த மூலப்பொருுள் மற்றும் உபகரணங்கள் பெறல். 5. அவர்கள் மூலம் குழுக்களை உருவாக்கி வேலையினை ஆரம்பித்தல். 6.திட்டத்தினை ஆரம்பித்து செற்படுத்தல். 7.இலாபத்தின் மூலம் ஒரு பகுதி சேமிக்கப்பட்டு மறுபகுதி அவர்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்கு உதவும்.

BUDGET

200000

BY Thina
7 Votes

Mobile application for garbage collection

The Problem

Solid Waste Management within the Kalmunai Municipal Council area is becoming a burning issue, with the rise of population and condensed habitats of the dwelling. This will pave way to many slums within this region in the near future. Infectious diseases are also being a major concern, related to this issue and this may aggravate, if not focussed.

THE SOLUTION

We, a group of youths, who are more interested towards modern technologies, have intended in developing a mobile application to the local authorities, which can ease them in distributing the resources in equity and collecting the solid wastes effectively. In this project the local authority will be provided with an interface to receive the notifications from the public and the public will be guided to use the application. Here we are based on a hypothesis, that majority of the public within the considered area are smartphone users. The public who are illiterate to use the application will be instructed by community based orgnizations and religious centres such as mosques, kovils, churches and temples. before implementing the project, we have planned to do a pilot study within a small region of our municipal to check for the feasibility of the project. To make aware the public, about the collecting route of the garbage vehicle, we have suggested a GPS device carrying vehicle which can be located easily by the public, which can make the collection easy.

BUDGET

130000

BY Irzomar
17 Votes