சர்வதேச சிறுமிகள் தினம்

by Shree
12-Oct-2017

பெண் குழந்தை வீட்டுக்கு சொத்து என்று சொல்வார்கள். ஆனால் இன்னுமே பெண் குழந்தையை கருவிலேயே அழிப்பதும் மலரும் மொட்டை கசக்கி முகர்வதுமாய் அவளுக்கான துன்பங்கள் ஓய்ந்த பாடில்லை

65 நாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை வைத்து ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கைப்படி ஒவ்வொரு வருடமும் போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்ட பாலியல் வல்லுறவு அல்லது வல்லுறவு முயற்சி மட்டுமே 250000 க்கு மேற்பட்டவை என்று தெரியவருகிறது. உண்மையில் பதியப்படாத குற்றங்கள் பலமடங்கு அதிகமாக இருக்கலாம்.

பிறந்து வளர்ந்து அவள் ஆசைப்படுவதைக்கற்று அவள் ஆசைப்படும் தொழிலில் ஈடுபட்டு, அவளுடைய முழுமையான ஆற்றலும் வெளிப்படும் வண்ணமான வாழ்க்கை அவளுக்கு கிடைக்க வேண்டியது நியாயமான ஒன்றாகும், சமூகக்கட்டுப்பாடுகள், குடும்பப்பாரம் போன்ற காரணங்களினால் ஒரு சிலரைத்தவிர இதை சாதிக்க முடிவதில்லை.

நாடு அபிவிருத்திப்பாதையில் செல்லும் இப்போதைய காலப்பகுதியில் பெண் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. அனைவருக்கும் இலவசக்கல்வி என்ற அடிப்படையில் நாடு பெண் குழந்தைகளின் கல்வியிலும் முதலீடு செய்கிறது. ஆனால் படித்து முடித்ததும் அவர்களை வீட்டுக்குள் முடக்கி வைப்பதானது நாட்டின் அபிவிருத்தியில் பின்னடைவே ஆகும். சர்வதேச பெண் குழந்தைகள் தினமான இன்று பெண்களும் நாட்டின் அபிவிருத்தியில் முழுமையான பங்களிப்பை வழங்கும் சூழல் கொண்ட ஒரு நாட்டை உருவாக்க உறுதி பூணுவோம்.

Views:
423