இளைஞர்களுக்கான பாதுகாப்பான தளங்கள்

by Shree
13-Aug-2018

நேற்றைய சர்வதேச இளைஞர் தினத்தின் இந்த வருடத்துக்கான கருப்பொருளாக இளைஞர்களுக்கான பாதுகாப்பான தங்களின் அவசியம் என்பதை ஐநா அமைப்பு பிரகடனப்படுத்தியுள்ளது,

நாடு என்பது சமூகங்களால் ஆனது. சமூகத்தின் அழகு குடும்பம், அக்குடும்பத்தினதும் சமூகத்தினதும் சமூக பொருளாதார கலாச்சார அபிவிருத்திக்கு முதுகெலும்பானவர்கள் இளைஞர்களே. அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதும், அவர்களை முடிவெடுக்கும் செயன்முறையில் இணைத்துக்கொள்ளப்பட்டு கொள்கைகளில் அவர்களது குரலும் ஏற்றுக்கொள்ளப்படுவதும், ஒன்றாக இணைந்து தங்கள் பிரச்சனைகளை பற்றி கலந்துரையாடி தாங்களே தீர்வுகளை கண்டு கொள்ளவும், தங்களில் இருந்து இன மத புவியியல் எல்லைகளின் வழியாக மாறுபட்ட சக இளைஞர்களுடன் கலந்து பேசி புரிந்துணர்வுடனான ஒரு வாழ்க்கையை கொண்டு நடாத்துவதன் மூலம் நாட்டில் நிலைபேறான சமாதானத்துக்கு தூண்களாக விளங்க உதவுவதும் இளைஞர் தொடர்பான அனைத்து பங்காளர்களினதும் கடமையாகும்.

இளைஞர்கள் ஒன்று கூடி தங்கள் சவால்களை குறித்து கலந்துரையாடவும் ஆக்க பூர்வமான முயற்சிகளில் ஈடுபடவும் அவர்களுக்கு பாதுகாப்பான தளங்கள் மிகவும் அவசியமானவை. தங்கள் சமுதாயத்தின் பிரச்சனைகளை தீர்க்க தாங்களே தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயற்பட ஒவ்வொரு இளைஞனும் வலுப்படுத்தப்படுவதும் வாய்ப்புக்கள் வழங்கப்பெறுதலும் முக்கியமானதாகும். ஒவ்வொரு இளைஞனும் தன்னுடைய முழுமையான உள்ளாற்றலை பூர்த்தி செய்து கொள்ள வாய்ப்புக்கள் வழங்கப்படும்போது மட்டுமே வினைத்திறனான அபிவிருத்தி சாத்தியமாகிறது.

இளைஞர்களுக்கான பாதுகாப்பான தளங்கள் ஏன் அவசியமானவை?

  • தங்கள் சமுதாயம் குறித்து தலைமைப்பொறுப்பை இளைஞர்கள் ஏற்றுக் கொள்ள
  • அறிவார்ந்த புரிந்துணர்வுடன் கூடிய முடிவுகளை எடுக்க
  • பிற இளைஞர்களின் எண்ணங்கள் அபிப்பிராயங்களை புரிந்து கொள்ளுதல் மூலம் இணக்கமான சமுதாயமாக மாறுதல்
  • ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் தன்னிறைவான வலையமைப்பாக உருவாதல்
  • நேர்முகமானதும், வினைத்திறனானதுமான சக்தியாக இளையசக்தி உருமாறல்

போன்ற நன்மைகளை குறிப்பிடலாம்.

பாதுகாப்பான தளங்கள் நான்கு வகைப்படும்

  1. சமூகத் தளங்கள் : இளைஞர்கள் ஆட்சி மற்றும் அமுலாக்க பிரச்சனைகள் தொடர்பில் இணைந்து செயற்படும் தளங்கள்
  2. பொதுவான தளங்கள்: இளைஞர்கள் தங்கள் சமூகத்தில் விளையாட்டுகளில் பங்குபெற்றுதல், ஓய்வு நேரங்களை கழித்தல் போன்றவற்றுக்கான தளங்கள்
  3. டிஜிட்டல் தளங்கள்: எல்லைகளைக்கடந்து இளைஞர்கள் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள வழி வகுக்கும் தளங்கள்

பௌதிகத் தளங்கள்: பல்வேறு தரப்பட்ட இளைஞர்கள் குறிப்பாக ஒதுக்கப்பட்ட மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு உதவும் தளங்கள

அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொண்டு தங்கள் பிரச்சனைகளை தாங்களே தீர்க்கவும், தங்களை வலுப்படுத்தும் வலையமைப்புக்களை உருவாக்கவும் உதவும் பொருட்டு உருவாக்கிய Youth4Youth செயற்றிட்டத்தின் மத்திய மாகாணத்துக்கான கலந்துரையாடல் கண்டியில் கடந்த வருடம் இடம்பெற்றது. இது இக்கலந்துரையாடல் தொடரின் நான்காவது கலந்துரையாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செயற்றிட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களின் ஒரு பகுதி

 

 

UNFPA இலங்கைப்பிரதிநிதி ரிட்சு நக்கேன் நிகழ்வில் உரையாற்றியபோது ..

2030 க்கான நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளின் இலக்கு 11 நகரமயமாக்கலில் அனைவரையும் உள்ளடக்கும் விதமான பாதுகாப்பான தளங்கள் அமைக்கப்படவேண்டும் என குறிப்பிடுகிறது. இளைஞர்கள் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட உலகில் வளர வளர, அவர்கள் அரசியல், சமூக மற்றும் போது விடயங்களில் ஆர்வத்தோடு இயங்க முற்படுகிறார்கள். இந்த சமயத்தில் பாதுகாப்பான தளங்கள் அமைக்கப்படுதலும் அவை அனைத்து இளைஞர்களாலும் அடையப்படக்கூடியதாக இருத்தலும் மிக முக்கியமான ஒரு தேவையாகியிருக்கிறது

Views:
581