இரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு; புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவுபெற்றது

by Sinduri Sappanipillai
10-May-2018

"சமாதானத்தையும் சமத்துவத்தையும் அடைவது ஒரு அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் அனைவரும், இந்நாட்டின் பல்வேறு கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொள்வதும், பாராட்டுவதும் அவசியமாகும்" என வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டு, மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன், இரண்டாம் தேசிய இளைஞர் உச்சிமாநாட்டின் (NYS 2018) ஆரம்ப விழாவில் கலந்து கொண்டு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில் எமது நாட்டின் நிலையான அபிவிருத்திக்கு நிலையான சமாதானமும், சமத்துவ சகோதரத்துவமும் அவசியமாகின்றது. இதனை நிலையான உறுதிமிக்க புதிய கொள்கைகளை உருவாக்குவதன் மூலமும், நல்லாட்சியின் மூலமும் உருவாக்க முடியும் எனவூம் கூறினார்.

இலங்கையின் அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் (SDJF) ஏற்பாடு செய்த இரண்டாம் தேசிய இளைஞர் மாநாடு கொழும்பில் ஏப்ரல்  20ம் மற்றும் 21ம் திகதிகளில் வெற்றிகரமாக நிறைவூசெய்யப்பட்டது. இலங்கையில் நிலைபேண்தகு சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைந்துகொள்வதில் இளைஞர்களின் வகிபாகத்தையும் நிலைப்பாட்டையும் பிரதிபலிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில்; இலங்கையின் சகல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த சுமார் 500 இளைஞர், யூவதிகள் மற்றும் 25 ற்கும் மேற்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒன்றிணைந்து “இளைஞர்களும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும் செயல்திட்டம்” என்ற உத்தேச கொள்கை ரீதியான வரைவொன்றை  தேசிய சக வாழ்வு,  கலந்துரையாடல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சிற்கு கோரிக்கையாக முன் வைக்க ஏகமானதாக தீர்மானித்தனர். இந்த உத்தேச கொள்கை கோரிக்கையானது இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கை 2014 ன் பிரிவூ 6.8 ஐ அடிப்படையாகக் கொண்டு முன்மொழியப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தேசிய இளைஞர் மாநாடு, 20 ம் திகதி BMICH லும்,  21ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்திலும் இடம்பெற்றது. SDJF தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல்,அரசகரும மொழிகள் அமைச்சு மற்றும் சுமார் 15 அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் கூட்டு சேர்ந்து நடாத்திய இம்மாநாட்டானது, இலங்கையின் பல்வேறுபட்ட பகுதிகளையும் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுசேர்வதற்கும், தமது கதைகளையும் சவால்களையும் பகிர்ந்துகொள்வதற்கும், ஒருவரிலிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், பரந்த வலையமைப்பொன்றின் அங்கமாக இருப்பதற்கும், தங்களுடைய பகிர்ந்துகொள்ளப்பட்ட பணித்திட்டங்களைச் செய்துகாண்பிப்பதற்கும் அத்துடன்,  நிலைபேண்தகு சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் பதிலிறுப்பதற்கான புத்தாக்க மற்றும் ஆக்கபூர்வத் தீர்வூகளைக் காட்சிப்படுத்துவதற்கும்  வழிவகுத்தது. 

அபிவிருத்தி மற்றும் சமாதானத்தில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றி இலங்கைக்கான கனடா உயர் ஸ்தானிகர் அதிமேதகு டேவிட் மெக்கின்னன் கருத்து தெரிவிக்கையில், "இளைஞர்கள் இந்நாட்டின் சம பங்குதாரர்களாக உள்ளனர், மேலும் அவர்களுக்கு பங்களிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் இளைஞர்கள் பெரும்பாலும் செயல்வாத செயல்பாட்டாளர்களாக செயல்படக்கூடியவர்கள் எனினும், அவர்கள் கொள்கை ரீதியாக உள்வாங்கப்படவில்லை எனவும், இளைஞர்களின் பங்குபற்றலுக்கான சிறந்ததொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இலங்கைக்கான யூனிசெப் பிரதிநிதி திருமதி போலா புலன்சியா, திரு. ஆ.லு.ளு தேசப்பிரிய, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல், அரசகரும மொழிகள் அமைச்சின் செயலாளர்; பேராசிரியர் ஷசஹித் ரசுல், ஆசியாவிற்கான பொதுநலவாய ஊடக கல்வி மையம் பணிப்பாளர்; (CEMCA); டாக்டர் சௌமிய லியனகே, பீடாதிபதி, அரங்கக்கலைகள் பல்கலைக்கழகம், திரு வருண அலகக்கோன், பிரதிக் கல்வி பணிப்பாளர் (நாடகம் மற்றும் அரங்கு), கல்வி அமைச்சு ஆகியோரும் இந்த மாநாட்டில் உரையாற்றினார்கள்.

‘மக்கள் அரங்கம்' மற்றும் ‘இளைஞர்களும் சமாதானத்தை கட்டியெழுப்புதலும்”; எனும் தலைப்புகளில் இரண்டு கையேடுகள் முதல் நாள் அங்குரார்ப்பண அமர்வில் வெளியிடப்பட்டன. இந்தக் கையேடுகளின் முதல் பிரதிகளை பிரதம விருந்தினருக்கும் ஏனைய விருந்தினர்களுக்கும் திரு. வருண அலகக்கோன் வழங்கி வைத்தார் ; கலை மற்றும் கலாச்சாரம் மூலம் பன்முகத்தன்மையை இளைஞர்கள் புரிந்து கொள்ள  உதவும் வகையில் இந்த கையேடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  

ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) இலங்கைக்கான பிரதிநிதி திருமதி. ரிட்சு நக்கேன் தனது பேச்சில் “இளைஞர்கள் பல ஆற்றல்கள், புதிய யோசனைகள் மற்றும் நாட்டிற்கு பங்களிக்க நல்லுறவைக் கொண்டுள்ளனர்.இளைஞர்களின் இந்த  திறன்,  நிலையான சமாதானத்திற்கும் அபிவிருத்திக்கும் முக்கியமாகும்”; என தெரிவித்தார்.

சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துதல்; சமாதான தூதுவர்களாக இளைஞர்கள்,  சமாதானத்தைக்கட்டியெழுப்பும் இளைஞர் வலையமைப்புக்கள், சமாதானத்திற்கான  இளைஞர்களின் பங்களிப்பு மற்றும் SDG களை ஊக்குவித்தல் போன்ற  நான்கு விரிவான கருப்பொருள்களின் கீழ் 7 இணை அமர்வுகள் மூலம், நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் இளைஞர்களின் பங்களிப்பு பற்றி கலந்துரையாடப்பட்டது.

இளைஞர்கள் முகம்கொடுக்கும் சவால்களை எதிர்கொள்வதற்காக அவகளது வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் இளைஞர்களுக்கு சந்தர்ப்பங்களை உருவாக்கும் வகையிலான ஒரு அமர்வை பேராசிரியர் ஷசஹித் ரசுல்; CEMCA  பணிப்பாளர் நடாத்தினார்.

அமர்வுகளின் போது, இளைஞர்களுக்கிடையே தங்களது சமாதான அனுபவங்கள், முன்னெடுப்புக்கள் பறிமாறப்பட்டதுடன் சமாதானத்திற்கான தேசிய மாற்றத்திற்கான புதுமையான உத்திகளை பற்றியூம் கலந்துரையாடப்பட்டது. 

SDJF இன் சமாதான திட்டங்களில் பங்களித்த  இளைஞர்களின் முயற்சிகளை அங்கீகரித்து சுமார் 120 இளைஞர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் இந்த உச்சிமாநாடு முடிவு  பெற்றது.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம்இ கனேடிய உயர் இஸ்தானிகராலயம், நீலன் திருச்செல்வன் அறக்கட்டளை, World Vision Sri Lanka, WUSC Sri Lanka மற்றும் ஆசியாவின் பொதுநலவாய ஊடக கல்வி மையம் (CEMCA) ஆகியன இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை வலுப்படுத்துவதற்கான நிதி உதவியை வழங்கி கைகோர்த்தன.

Views:
1011