பிளாஸ்டிக் பாவனை

by Tamil Manjari
08-Aug-2017

உலகளாவிய ரீதியில் ஆண்டொன்றுக்கு எட்டு மில்லியன்  மெற்றிக்தொன் பொலித்தின்களும் பிளாஸ்டிக் பொருட்களும் சமுத்திரத்தில் சேருகின்றன. இவ்வாறு தொடர்ந்து பொலித்தின்களும் பிளாஸ்டிக் பொருட்களும் சமுத்திரத்தில் சேருமாகவிருந்தால், 2050ஆம் ஆண்டளவில் சமுத்திரத்தில் காணப்படும் மீன்களின் எண்ணிக்கையை விட, பொலித்தின் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்குமென்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சூழலியல் ஆய்வாளரும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்;ட விரிவுரையாளருமான கலாநிதி ரி.திருச்செல்வம் தெரிவித்தார்.

சூழல் மாசடைவதற்கு பிரதான காரணமாக  பொலித்தின்களும் பிளாஸ்டிக் பொருட்களும்; உள்ளதாகவும் அவர் கூறினார்.

Source article: http://bit.ly/2hD6jvx

உங்கள் பிரதேசத்தில் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் அரக்கனை நீங்கள் எவ்வாறு ஒழிக்கப்போகிறீர்கள்?நீங்கள் செய்வது சிறுமுயற்சி என்றால் கூட அது பாரிய சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடும். உங்களுடைய ஆலோசனையை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

Views:
523

2017

Budget
150000
4 votes
இளைஞர்களும் சீரழிவும் போதைவஸ்தும்

அடிமட்ட மக்கள் மத்தியிலிருந்து விழிப்புணர்வு பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு போதைவஸ்து வியாபாரிகளை இனம்கண்டுமாற்று தொழிலை இனம் காணல் போதைவஸ்து ஈடுபடுவர்களுக்கு உளவல ஆற்றுப்படுத்தல் போதைவஸ்துக்களினால் சீரழீந்த அவர்களை நேரடியாக இனம் கண்டு மாற்று தீர்வை காணுதல் இதற்குரிய இலக்கு குழு 29வயதுக்கு உற்பட்ட இளைஞர் யுவதிகள்

by VT Gafoor
Budget
130000
17 votes
Mobile application for garbage collection

We, a group of youths, who are more interested towards modern technologies, have intended in developing a mobile application to the local authorities, which can ease them in distributing the resources in equity and collecting the solid wastes effectively. In this project the local authority will be provided with an interface to receive the notifications from the public and the public will be guided to use the application. Here we are based on a hypothesis, that majority of the public within the considered area are smartphone users. The public who are illiterate to use the application will be instructed by community based orgnizations and religious centres such as mosques, kovils, churches and temples. before implementing the project, we have planned to do a pilot study within a small region of our municipal to check for the feasibility of the project. To make aware the public, about the collecting route of the garbage vehicle, we have suggested a GPS device carrying vehicle which can be located easily by the public, which can make the collection easy.

by Irzomar
Budget
30000
6 votes
கல்விப் பிரச்சினை

அக்கிராமத்திலேயே உள்ள சாதாரண தரம் மற்றும் உயர்தரம் முடித்தவர்களையும் கற்பிப்பதில் ஆர்வம் கொண்டவர்களையும் இனங்கண்டு கலந்துரையாடி கற்பிப்பதற்கு வழிப்படுத்தல். கிராம மக்களிடத்தே பாலர்களுக்கான கல்வியின் முக்கியத்துவத்தை விழிப்புணர்வூட்டி அசிரியர்களுக்கான சம்பள ஏற்பாடுகளை மக்களூடாகவே நடைமுறைப்படுத்தல்.

by Kumar Kumar
Budget
50000
2 votes
பிளாஸ்ரிக் பிரச்சினை

இயன்றளவு திணைக்கள நிகழ்வுகளில் பிளாஸ்ரிக் போத்தல் பாவனையை குறைப்பதன் மூலம் தீர்க்கலாம்

by sanjeev
Budget
100000
5 votes
கல்சியமற்ற நீரும் கவலை கடந்த வாழ்வும்

முதலாவதாக கல்சியம் கலந்த நீர் பற்றியதும் அதனை பாவிப்பதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஆபத்துக்கள் குறித்தும் வெளிப்படையானதும் உண்மையானதுமான தகவல்களை மக்களுக்கு அறியப்படுத்தி அது தொடர்பான தெளிவினை ஏற்படுத்த வேண்டும். குறித்த பாதிப்பிலிருந்து ஒவ்வொருவரும் வெளிவரவும் குறைந்தது பிரச்சினைப் பற்றிய பூரண அறிவுப் பெற்றவர்களாக பாதுகாப்பு தொடர்பாக சிறிதேனும் முயற்சிகளை சுயமாக மேற்கொள்ளக் கூடிய பாங்கினை கலந்துரையாடல்கள்,விழிப்பபுணர்வு செயற்றிட்டங்கள் மூலம் ஏற்படுத்தி குறித்த நோயற்ற வாழ்வற்கு அனைவரையும் இட்டுச்செல்ல வேண்டுமென்பதே எனது நீண்ட நாள் ஆவல்.இதனை செயன்முறைப்படுத்தி ஒரு உயிரையேனும் நான் காப்பாற்றினால் அதுவே என் வாழ்நாள் சாதனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.

by jancy
Budget
100000
1 votes
பிளாஸ்டிக் பாவனை

இருதயபுரம் மத்தி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட வறுமையில் கஷ்டப்படும் ஓர் 10 குடும்பங்களுக்கு சுயதொழிலாகவும் சமுதாயத்தில் பிளாஸ்டிக் பாவனையை குறைக்கும் முயற்சியாகவும் பனையோலை மூலம் கூடைகள் மற்றும் உணவுகளை பரிமாறும் தட்டுக்களையும் தயாரிப்பதன் மூலம் சுழலலை பிளாஸ்டிக் பாவனையிலிருந்து பாதுகாக்கலாம். இதனால் அவ்குடும்பங்களுக்கும் வறுமானமும் கிடைக்கும்.

by Noyalinmariyathas
Budget
99999
3 votes
Garbage to Business

A simple solution to connect the plastic factory like vendors, some street garbage collectors( Some one who collect the reusable things and sell to the shop in streets) and people. The web portal for the plastic factory like vendors and mobile application for the people and street garbage collectors. Scenario : when people have the garbage on their home they send a push notification to our web portal and get notified to the street garbage collectors, when the street garbage collectors get notified they go and collect the materials from the people and it will notify to the plastic company vendors and they are set bidding to the street garbage collectors and buy the materials from them. So finally garbage go to proper place for reuse and middle man gets job and earns money.

by NIFRAS ISMAIL
Budget
120000
0 votes
பிளாஸ்டிக் பாவனையை குறைக்க விழிப்புணர்வு வழங்கள்

1. கிராம மட்டத்தில் பிளாஸ்டிக் பாவனையின் மூலபாதிப்புகளை அடையாளங் காணல். 2. அதிகாரிகளின் கருத்தைப் பெறல். 3. பாதிக்கப்படும் மக்களிடம் கருத்துப் பெறல். 4. பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றீடானவற்றை அறிமுகப்படுத்தல். 5. இவற்றை உள்ளடக்கி ஒரு வீடியோ தயாரித்தல். ஒரு கட்டுரை வரைதல். குறித்த கிராமத்தின் தலைமைபீடங்களுக்கு வழங்குதல். 6. சமூக ஊடகங்களில் பகிர்தல்.

by Isbahan Sharfdeen
Budget
100000
0 votes
திண்மக்கழிவுகளை மீள் சுழற்சி செய்தல்

மட்டக்களப்பு நகர சபைக்குட்பட்ட சில வீடுகளை தெரிவு செய்து குப்பைகளை பிரித்து குப்பை வண்டிக்காரர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி கொட்டப்படுகிற குப்பைகளை இலகுவாக பிரித்து மீள் சுழற்சிக்கு உட்படுத்த முடியும். கண்ணாடி, கடதாசி, உக்கக்கூடிய கழிவுகள், பிளாஸ்டிக் போன்றவற்றை மக்களே பிரித்துப்பையினுள் போட்டால் மீள்சுழற்சி செய்யவும் இலகுவாக இருக்கும், குடும்பங்களுக்கு 500 ரூபாய் செலவில் பைகளை வழங்குதல்

by kiruba