முகத்துவார மணல் அகழ்வும்! நசுக்கப்பட்டுவரும் சிலாபம் மீனவர்களும்!!

by admin
29-Jun-2020

முகத்துவார மணல் அகழ்வும்! நசுக்கப்பட்டுவரும் சிலாபம் மீனவர்களும்!!

அரசியல் ரீதியாகவும் அதிகார ரீதியாகவும் தமிழர்கள் எவ்வளவு நசுக்கப் படுகிறார்கNsh  அதற்கு ஒப்பாற் போல் பெரும்பான்மையின சிங்கள மொழி பேசும் மக்களுக்கும் அநீதி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை மொத்த தேசிய வருமானத்திற்கு விவசாயம், பெருந்தோட்டம், சுற்றுலாத்துறை, உள்ளூர் உற்பத்திகள், போன்றவற்றுடன் மீன்பிடித் துறை மூலமும் ஒரு கணிசமான பங்கினை பங்களிப்பு செய்து கொடுக்கிறது. ஆனால் மீனவர்கள் இயற்கைக் காரணிகளாலும் மானிட காரணிகளாலும் பல சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கும்போது.   மீனவர்கள் அரசியல் ரீதியாகவும் ஆட்சியாளர்கs; ரீதியாகவும் இவர்கள் சுரண்டப்பட்டும் நசுக்கப்பட்டும் கொண்டுதான் உள்ளார்கள்.

இந்நிலையில் இலங்கையின் மேற்கே உள்ள மாவட்டமான புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் பிரதேச மீனவர்கள் தற்போது முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் ஏராளம்.

புத்தளம் சிலாபம் பிரதேச பெரும்பான்மை மக்களின் பிரதான வாழ்வாதார தொழில் மீன்பிடி மட்டுமே.  இப்பிரதேசத்தில் சுமார் 3500 மீனவர்கள் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.  இப்பிரதேச மக்கள் நீண்ட காலமாக சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தை  புனரமைப்பு  செய்து தருமாறு அரசியல்வாதிகளிடமும் அதிகாரிகளிடமும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.  இவ்வாறு இருந்த போதிலும் இம் மக்களின் கோரிக்கை இதுவரையில் நிறைவேற்றப்படாத ஒன்றாகவே காணப்பட்டு வருகிறது. அதேவேளை கடந்த நான்கு வருடமாக அரசாங்கமும் மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் வருகின்றன.

சிலாபம் மீனவர்கள் வாழும் பிரதேசம் ஒரு பாரிய களப்பையும் அதாவது சுமார் 11 கிலோ மீட்டர் நீளம் கொண்ட கடற்கரையை அண்மித்த பிரதேசத்தில் வாழ்ந்து வரும் இம்மக்கள் இவ் களப்பு பிரதேசத்தை மீன்பிடித் தொழிலுக்கு சாதகமாக ஆரம்ப காலம் தொட்டு பயன்படுத்தி வருகின்றார்கள்.

குறித்த களப்பு பிரதேசமானது கடலுக்கு சமாந்தரமாக கடலில் அண்மித்த பகுதியில் காணப்படுகிறது இக்களப்பு பிரதேசத்தில் மேலதிகமாக நீர் கடலுடன் கலக்கப்படுகிறது இவ்விடம்  ஆத்துவாய் என்றும் அல்லது சிலாபம் முகத்துவாரம் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரதேச மீனவர்கள் இந்த களப்பு பிரதேசத்தை மீன்பிடிப் படகுகளை நிறுத்தி வைக்கும் துறைமுகkhகவே பாவித்து வருகின்றனர். இந்த துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக ஆழ் கடலுக்கு செல்லும் வழியாக முகத்துவாரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

சிலாபம் மீன்பிடித் துறைமுகம் அமைந்திருக்கும் இவ் களப்பு பிரதேசம் கடலோடு சங்கமிக்கும் பகுதியில் தெதுறுஆறும் சங்கமிக்கின்றது

தெJரு ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மாத்தளையில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 5வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 8வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4313 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 27 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2616 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 6வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்

இதன் காரணமாகவும் ஆவணி மாதம் மற்றும் புரட்டாதி மாதங்களில் வீசப்படுகின்றன கச்சான் காற்றாலும் தெதுறு ஓயாவின் நீரோட்டத்தாலும் (இலங்கையின் மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்று கச்சான் காற்று என அழைக்கப்படுகிறது) இந்த ஆற்றுவாய் பிரதேசம்; மணலால் நிரப்பப்படுகிறது

இந்த காலப்பகுதியில் சிலாபம் பிரதேச மீனவர்கள்  தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடித் தொழிலை செய்வதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறாக அத்துவாய் முற்றாக அடைக்கப்பட்ட நிலையில் மீனவர்கள் தெதுருஓயா வழியாக கடலுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது இவ்வாறு குறித்த பிரதேசத்தின் மீனவர்கள் இந்த ஆற்றை கடலுக்கு செல்லும் பிரதான பாதையாக பயன்படுத்துவதனால் வருடத்தில் பல உயிரிழப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்

 

அதேவேளை ஆறு பெருக்கெடுக்கும் காலங்களில் இந்த களப்பு பிரதேசத்தை மீனவர்கள் தங்களுடைய படகுகளை நிறுத்திவைக்கும் பிரதேசமாக வைத்திருப்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த காலப்பகுதியில் தமது படFகளை நிறுத்தம் பகுதியாக இப்பிரதேசத்தில் இருந்து தெற்கே 25 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நீர்கொழும்பு அல்லது புத்தளம் கல்பிட்டி பிரதேசங்களை பயன்படுத்தி வருகின்றனர்

குறித்த பிரச்சனை நீண்டகால ஒரு பிரச்சனையாகும். அத்துவாய் பிரதேசத்தை ஆழப்படுத்தி ஒரு பாலம் அமைத்துத் தரவேண்டும் என்பது குறித்த மீனவர்களின் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இலங்கை அரசாங்கம் 2016ஆம் ஆண்டு எட்டாம் மாதம் 16ஆம் தேதி அமைச்சரவையில் சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தை உறுதிசெய்தல் எனும் ஒர் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது

தெதுருஓயா முகத்துவாரத்துக்கு அண்மையில் அமைந்துள்ள சிலாபம் கடற்றொழில் துறைமுகத்தை மீண்டும் அபிவிருத்தி செய்ய வேண்டுமென பிரதேச கடற்றொழிலாளர்களினால் நீண்டகாலமாக செய்யப்பட்டு வரும் கோரிக்கை ஒன்றாகும் என்பதோடு, இதற்கமைவாக, அதன் நவீனமயப்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 1,110 வெளியே எஞ்சின்களுடனான மீன்பிடி படகுகளும் 35 பலநாள் படகுகளும் சிலாபம் கடற்றொழில் துறைமுகம் சார்ந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, இந்த படகுகள் களப்பு பிரதேசத்தை நங்கூரமிடும் பிரதேசமாகவும் உபயோகப்படுத்துகின்றன. இதன் போது உருவாகும் பிரதான பிரச்சினையாக காணப்படுவது நுழைவு வழியாக தெதுருஓயா முகத்துவாரம் ஊடாக கடற்றொழில் படகுகள் செல்லும் போது அவை பாதுகாப்பற்ற நிலைமைக்கு ஆளாகின்றமையாகும். முக்கியமாக கடல் கொந்தளிப்பு அடையும் காலப்பகுதியில் இந்த முகத்துவாரத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் படகுகள் விபத்துக்கு ஆளாகின்றமையினால் உயிர் மற்றும் சொத்து இழப்புக்கள் ஏற்படுகின்றன.

ஆதலால், கடல் கொந்தளிப்பற்ற காலப்பகுதியில் மாத்திரம் பிரதேசவாழ் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைமைக்கு தீர்வொன்றாக உரிய சாத்தியத் தகவாய்வின் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளவாறு நீர்வழி உடைப்பினை நிu;மாdpப்பதற்கும் நுழைவு வழியிலும் களப்பு முகத்துவாரத்திலும் படிந்துள்ள மணலை அப்புறப்படுத்துவதற்காகவும் அதற்குத் தேவையான 550 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது

இவ்வாறு அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டு பணிகள் ஆரம்பமாயின

குறித்த வேலைத்திட்டத்தின் படியும் அமைச்சரவை தீர்மானத்தின் படியும் களப்பு முகத்துவாரத்தில் படிந்துள்ள மணலை அப்புறப்படுத்தி நுழைவாயை ஆoப் படுத்துவதே இதன் திட்டம் ஆனால் இப்பிரதேசத்தில் மூன்றரை வருடமாக மணல் அப்புறப்படுத்த படுகிறதே தவிர ஆற்றுவாய் இன்னமும் ஆழப்படுத்தி திட்டம் முடிவுக்குக் கொண்டு வரவில்லை

ஆனால் மணல் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பெயரில் இரண்டு பாரிய இயந்திரங்கள் மூலம் 2016 ஆம் ஆண்டிலிருந்து மணல் அகழ்வு இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது

பிரதேச மீனவர்கள் கூறுகையில் தாம் தட்டிக் கேட்க முடியாது அரசியல் செல்வாக்குடன் சில அதிகார வர்க்கத்தினாலும் இந்த மணல் கொள்ளை இடம்பெறுவதாக கூறுகின்றனர் ஆனால் தாம் இதை கேட்கும்போது மிக விரைவில் பணிகள் பூர்த்தி ஆகிவிடும் என கூறி மூன்றரை வருடம் இழுத்தடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர்

அதேவேளை பிரதேசத்தை புனரமைப்பு செய்து கொடுக்fhமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டால் மட்டுமே இந்த மணல் வியாபாரத்தை மேற்கொள்ள முடியும்

சுமார் 11 கிலோ மீட்டர் நீளமான இந்த பாரிய களப்பு பிரதேசம் மீனவர்கள் கையிலிருந்து பறி போகுமோ என்ற அச்சமும் மற்றுமொரு பக்கத்தால் இப்பிரதேச மீனவர்களுக்கு சற்று இடியை கொடுத்துள்ளது. மீனவர்கள் ஆண்டாண்டு காலமாக தாம் பயன்படுத்தி வந்த இந்த களப்பு பிரதேசம் இரால் வளர்ப்புக்காக தனியாருக்கு கொடுப்பதாக ஒரு தீர்மானம் இருப்பதாகவும் இதன் காரணமாகத்தான் தமக்கு இந்த ஆற்றுவாய் பிரதேசத்தை புனரமைப்பு sசெய்து தரவில்லை என மக்கள் சந்தேகப்பட்டு அச்சத்தில் உள்ளனர்

தமக்கான தீர்வுகள் அதிகாரிகளாலும் ஆட்சியாளர்களாலும் நிச்சயம் கிடைக்காது ஒருவேளை இப்பிரதேசம் கூட தமது கையைவிட்டு போகலாம் இவ் களப்பு பிரதேசத்தை இரால் வளர்ப்புக்காக தனியாருக்கு கை அளிக்கலாம் அல்லது நாடுகளுக்கு கையளிக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ள மீனவர்கள் தற்போது பதவியேற்றுள்ள புதிய ஜனாதிபதி மூலம் தமக்கு விடிவு கிடைக்கும் என நம்புகின்றனர்

 

 

Views:
1496