University of jaffna Non-academic university staff on strike | www.ivoice.lk

471

நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் – யாழ்பல்கலைக்கழக ஊழியர்கள்

அனைத்து பல்கலைக்கழக கூட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இழப்பீட்டுப்படி  வழங்குதல் உட்பட பல கோரிக்கைகளைகளை முன்வைத்து நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்த போராட்டத்தில ஈடுபட்டுவருகின்றனர் பல காலங்களாக பல்வேறு வகையான போராட்டங்களில் ஊழியர்கள் ஈடுபட்டபோதிலும் தமக்கான உரிய பதில்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சும் எடுக்கவில்ல என யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தெரிவித்தனர்.6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கல்விசாரா ஊமியர்கள் தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.அதில், யாழ்பல்கலைக்கழக ஊழியர்கள்  மாதாந்த இழப்பீட்டுக் கொடுப்பனவு அதிகரித்தல், மாதாந்த      இழப்பீட்டுக் கொடுப்பனவுக்கான ஊழியர் சேம இலாப ஓய்வூதியப் பணம்,ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கான பங்களிப்பினைப் பெறுதல்.சகல பல்கலைக்கழக ஊழியர் சமூகத்திற்கும்நன்மை பயக்கும் ஓய்வூதிய முறைமையொன்றினை தயாரித்துக்கொள்ளல்.சுகல பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கும் பொதுவான வைத்திய காப்புறுதி முறைமை ஒன்றினை தயாரித்துக்கொள்ளல்.இடைநிறுத்தப்பட்ட மொழி தேர்ச்சிக் கொடுப்பனவு பெறுதல் ,சோத்துக் கடன் எல்லை அதிகரிப்பு6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியே இந்த தொழிற்சங்க போராட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது

NO COMMENTS

LEAVE A REPLY